Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY: தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்... திடீரென சரசரவென குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

GOLD RATE TODAY:  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ. 5,029-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.40,232-க்கு விற்பனையாகிறது.

Gold rates today in Chennai
Author
Chennai, First Published Apr 19, 2022, 10:32 AM IST

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் சற்று குறைந்துள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Gold rates today in Chennai

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ. 5,029-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.40,232-க்கு விற்பனையாகிறது.

Gold rates today in Chennai

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு  10 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,900 விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios