Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY : ஷாக்கிங் நியூஸ்.. கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

GOLD RATE TODAY : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ. 4,793-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.38,344-க்கு விற்பனையாகிறது.

chennai gold rate today increase
Author
Chennai, First Published Mar 31, 2022, 12:02 PM IST


உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் : 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

chennai gold rate today increase

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ. 4,793-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.38,344-க்கு விற்பனையாகிறது. 

chennai gold rate today increase

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 60 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,300 விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios