தென் மாவட்டங்களுக்கு அதிகமான முதலீடுவரும் பட்ஜெட் தேவை: தமிழக அரசிடம் சிஐஐ வலியுறுத்தல்
தமிழக பட்ஜெட்டில் தென், மத்திய மாவட்டங்களுக்கு அதிகமான முதலீடு வரும்வகையிலும், அந்த மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ) வலியுறுத்தியுள்ளது
தமிழக பட்ஜெட்டில் தென், மத்திய மாவட்டங்களுக்கு அதிகமான முதலீடு வரும்வகையிலும், அந்த மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ) வலியுறுத்தியுள்ளது
பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகள் குறித்து மாநில நிதிஅமைச்சரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பழனிவேல் தியாக ராஜனச் சந்தித்து சிஐஐ நிர்வாகிகள் தங்களின் அறிக்கையை அளித்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். கொரோனா பெருந்தொற்றால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பலர் வேலையிழந்துள்ளதால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுஅவசியம்.
குறிப்பாக மாநிலத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக மத்திய, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு திட்டங்கள்அவசியமாகும்.
எளிதாக தொழில்செய்யும் விதத்தில், நிறுவனங்கள், சுயசான்று அளித்தலை அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் லைசென்ஸ், புதுப்பித்தலை நவீனப்படுத்த வேண்டும். ஒற்றைச்சாளர முறையில்இருக்க வேண்டும், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வீடுகட்டுதல் துறை முக்கியமானது. ஆதலால், ரியல் எஸ்டேட் துறையை தொழில்துறையோடு சேர்த்து, முதலீட்டுக்கான ஊக்கம் அளிக்க வேண்டும்.
வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். குறிப்பாக ட்ரோன்களைப் பயன்படுத்தி வேளாண் நிலங்களுக்கு பூச்சி கொல்லி தெளித்தல், உரங்கள் இடுதல், ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும்.இதற்குரிய தொழில்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர ஆதவு தர வேண்டும்.
வாகனங்களை மறுசுழற்சி செய்யும் வகைியல் புதிய மறுசுழற்ச்சி மையத்தை அரசுஉருவாக்க வேண்டும். அந்த மையத்தில் பழைய வாகனங்கள் உடைத்தலும், பயன்படுத்திய கார்களை விலைக்கு விற்கும் மையமாகவும் இருக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது