பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று , நிதியமைச்சர் அருண்ஜெட்லி ,பொது பட்ஜெட்டுடன் , ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் விளைவாக ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவும், அதே சமயத்தில் பல பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி,

விலை உயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள் உள்ளிட்ட பொருட்களின் விலை கண்டிப்பாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவ எரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட இவை அனைத்து பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.