பட்ஜெட் 2025 : 4 அரசு திட்டங்களுக்கு அடிக்கப் போகிறது ஜாக்பாட்!!

பிப்ரவரி 1, 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2025 Expectations from PM Kisan Awas Yojana Ayushman Bharat Scheme Updates

Budget 2025 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கலாம். அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் இருக்குமா என்று பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தெரிய வரும். இந்த பட்ஜெட்டில் பல அரசுத் திட்டங்களுக்கு பெரிய அறிவிப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். குறிப்பாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி மற்றும் பிரதம மந்திரி அவாஸ் போன்ற திட்டங்களுக்கு நல்ல அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா:
பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவில் மானியத் தொகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு வீடு கட்டித் தருவதுடன், ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கவும், பட்ஜெட்டில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவில் மானியத் தொகையை அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனுடன், பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவிற்கு வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படலாம்.

2025 பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்குவோர் என்னென்ன எதிர்பார்க்கலாம்? காத்திருக்கும் குட்நியூஸ்?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி:
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் தொகை 12,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பட்ஜெட்டில் அரசு இந்தத் தொகையை இரட்டிப்பாக்கி அதாவது ரூ.12,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது. விவசாயிகள் நீண்ட காலமாக இந்தத் தொகையை அதிகரிக்க கோரி வருகின்றனர். இது தவிர, விவசாயிகளுக்கு மலிவு விலையில் கடன் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

கிராம சாலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு:

கிராம சாலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த முறை பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இதற்காக ரூ.14,800 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு இது ரூ.16,100 கோடியாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, SME துறைக்கு முன்பை விட அதிக கடன் உத்தரவாதம் மற்றும் குறைந்த வட்டியில் கடன் அறிவிக்கப்படலாம்.

தினமும் ரூ.7 சேமித்தால் மாதம் ரூ.5000 பென்ஷன் பெறலாம்! அரசின் அசத்தல் திட்டம்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:
ஆயுஷ்மான் பாரத் திட்டமும் பயனடைய வாய்ப்பு உள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மேலும் பல குடும்பங்கள் இலவச சிகிச்சை பெற முடியும். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை இந்தத் திட்டத்தில் இணைப்பதாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios