மத்திய பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?
பட்ஜெட் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நிலையான வரிவிலக்கு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை அறிவிக்கப்படுமா என நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
"தற்போதைய சட்டப்படி அனைத்து சம்பளம் பெறும் தனிநபர்களுக்கும் ரூ.50,000 நிலையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்த பணவீக்க விகிதங்கள் நிலையான வரிவிலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டிய தேவையை உருவாக்குகின்றன" என இண்டஸ் லா அமைப்பின் லோகேஷ் ஷா கூறுகிறார்.
பட்ஜெட் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நிலையான வரிவிலக்கு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிலவில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்காம்! விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய லொகேஷன் ரெடி!
சம்பளம் மூலம் கிடைக்கும் வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் இருந்து நேரடியான வழங்கப்படும் இந்த நிலையான வரி விலக்கு பெற, தற்போது கூடுதல் ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. முந்தைய பட்ஜெட்டிலேயே இதனை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், முழு பட்ஜெட்டில் மட்டுமே இதுபோன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான வரிச் சலுகை அதிகரிக்கிறது என்று கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனம் கூறுகிறது. மருத்துவச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவிகள் கணிசமாக உயர்ந்துள்ளன எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. எனவே நிலையான விலக்கு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட வேண்டியது அவசியம். அதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணம் பெறுவார்கள் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவான உள்ளது. இந்த மாற்றம் தனிநபர்கள் அதிகமாகச் செலவழிக்கவோ அல்லது அதிகமாகச் சேமிக்கவோ உதவுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மூலதன ஆதாய வரி அமைப்பு சிக்கலானதாக உள்ளது. இதன்படி பல்வேறு சொத்துக்களுக்கு வெவ்வேறு வரி விகிதங்கள் உள்ளன. ஒரே சீரான மூலதன ஆதாய வரி கட்டமைப்பை வழங்க இந்த அமைப்பை எளிமையாக்குவது முக்கியம் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களுக்கு செம டிமாண்ட்! மின்னல் வேகத்தில் எகிறிய ஐபோன் விற்பனை!