Asianet News TamilAsianet News Tamil

Suzuki Katana 2022 : அசத்தும் தோற்றம், சீறும் வேகம் - 2022 கட்டானா மாடலை அறிமுகம் செய்த சுசுகி

சுசுகி நிறுவனம் சிறு அப்டேட்களுடன் 2022 கட்டானா மாடலை சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

2022 Suzuki Katana unveiled
Author
Tamil Nadu, First Published Feb 3, 2022, 11:34 AM IST

சுசுகி நிறுவனம் 2022 கட்டானா மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் தற்போது நைட் மோட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 999சிசி, இன்லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் யூரோ 5 / பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் மேம்பட்ட ரைடு-பை-வயர், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் ஸ்லிப்பர் கிளட்ச், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பை-டைரெக்‌ஷனல் குயிக்-ஷிஃப்டர் வழங்கப்பட்டு உள்ளது.

2022 Suzuki Katana unveiled

மேலும் முன்புறத்தில் கோல்டு ஃபோர்க், ரெட் மோனோஷாக், டூ-டோன் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் சாலிட் ஐயன் கிரே மற்றும் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் 2022 சுசுகி கட்டானா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios