இந்தியர்களுக்கான அமெரிக்க விசா; எப்போது கிடைக்கும்? என்ன சிக்கல்? முழு விபரங்கள் இதோ !

By Raghupati RFirst Published Sep 28, 2022, 2:56 PM IST
Highlights

இந்தியர்களுக்கு வரும் மாதங்களில் விசா வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய் அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், வசிப்பதற்கும் விசா பெறுவதில் இந்தியர்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!

இதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ''இந்தியரின்  விசா விண்ணப்பங்களுக்கு விரைவில் முடிவு காணப்படும். இந்தியர்களுக்கு விசா வழங்குவதற்கு என்று அதிபர் ஜோ பைடன் சிறப்பு திட்டம் வைத்து இருக்கிறார். விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், தற்போதுதான் அமெரிக்கா பெரிய அளவில் தன்னை கட்டமைத்து வருகிறது. இந்தியா என்று வரும்போது அதற்கான சலுகைகளை முடிவு செய்து வைத்து இருக்கிறோம். வரும் மாதங்களில் இதற்கான பலனை நீங்கள் பார்க்கலாம்'' என்றார்.

இதையடுத்து பேசிய ஜெய்சங்கர் கூறுகையில், ''சில சவால்கள் இருந்தன. அவற்றை அமெரிக்க பிளிங்கனிடம் விவரித்துள்ளேன். விரைவில் விசா தொடர்பான சிக்கல்களுக்கு முடிவு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார். கடந்த 2020, மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து இருந்தது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளத்தின்படி, அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கான விசிட்டர் விசாவைப் பெற விரும்பும் இந்தியர்களுக்கான காத்திருப்பு காலம் 800 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்/பரிமாற்ற விசிட்டர் விசாக்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கான காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட 400 நாட்களாக உள்ளது.

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

click me!