வீட்டு சிறையில் அதிபரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்!

By Raghupati R  |  First Published Sep 27, 2022, 9:46 PM IST

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார்.


சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச்சிறையில் இருந்ததாகவும் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததாகவும் பரவலாக வதந்திகள் சீனாவைக் குறித்து இணையதளத்தில் கடந்த தினங்களுக்கு முன்பு வேகமாகப் பரவி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

இந்த நிலையில் தற்போது சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் வணிக கண்காட்சியில் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து இறக்கி விட்டனர்’ என்று சீனா சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் வேகமாகப் பரவியது.

இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!

கடந்த 16ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடித்து பெய்ஜிங் திருப்பிய நிலையில் இதுவே அவரின் முதல் அதிகாரப்பூர்வ தோற்றமாக இருக்கிறது. இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸ் அக்டோபர் 16 பெய்ஜிங்கில் நடைப்பெறவுள்ளது. இதில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதிபர் ஜின்பிங் இன்று வெளியே தோன்றியதன் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

click me!