பெண் ஒருவர் கேக்கில் ரெஸ்யூமை எழுதி பிரபல நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில், வட கரோலினா பகுதியில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற பெண் ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் மற்ற நபர்களை விடத் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்று யோசித்து இருக்கிறார். சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த கார்லி, நைக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் விழா கொண்டாடும் நாளில் அந்த அச்சடிக்கப்பட்ட கோக்கை அனுப்பி உள்ளார்.
undefined
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?
அந்த சம்பவத்தை இணையதளத்திலும் கார்லி பதிவிட்டுள்ளார். அந்த வகையில் நைக் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திற்கு ரெஸ்யூம் அச்சிடப்பட்ட கேக்கை அனுப்பியுள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எந்த அளவுக்கு இந்த முயற்சிக்கு ஆதரவு கிடைத்துள்ளதோ, அதே அளவுக்கு எதிர்ப்பும் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த பெண், 'சில வாரங்களுக்கு முன்பு நான் நைக்கிற்கு கேக் மூலம் தனது ரெஸ்யூம்மை அனுப்பினேன். அந்நிறுவனம் தற்போது யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்க தயாராக இல்லை. ஆனால் நான் யார் என்பதை அந்த நிறுவனத்திடம் தெரியப்படுத்துவதற்காகத்தான் கேக்கில் ரெஸ்யூமை தயார் செய்து அனுப்பினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !