அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போன்றோர் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை கால கொண்டாட்டங்கள் களையிழந்தன என்று கூற வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதால் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முழு உற்சாகத்துடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
இதனால், தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். கடை வீதிகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இந்த வருட தீபாவளி ஆரம்பம் முதலே களைகட்டி இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் முதல் இந்தியர்கள் வசிக்கும் நாடுகளிலும் தீபாவளி களைகட்ட தொடங்கிவிட்டது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அங்கு தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.இந்த ஆண்டு தீபாவளியை அமெரிக்காவில் உள்ள தனது அதிகாரபூர்வ கடற்படை இல்லத்தில் அமெரிக்காவில் வாழும் மற்ற இந்தியர்களோடு நேற்று கொண்டாடினார் அவர்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!
சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் நீரா டாண்டன் மற்றும் பிடனின் உரை எழுத்தாளர் வினய் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புளோரிடா வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2000 இந்தியர்கள் பங்கு பெற்றுள்ளார். உலக நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!