சீனாவின் பிரதமராக இருக்கும் மூத்த தலைவரும்,அதிகாரத்தில் 2வது இடத்தில் இருக்கும் லீ கெக்கியாங் அரசியல் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் பிரதமராக இருக்கும் மூத்த தலைவரும்,அதிகாரத்தில் 2வது இடத்தில் இருக்கும் லீ கெக்கியாங் அரசியல் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சக்திவாய்ந்த பிரிவான 7 பேர் கொண்ட பொலிட் பியூரோ குழுவில் 4 உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்படவில்லை. 3 பேர் மட்டுமே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர், அதில் ஒருவர் அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்.
சீனாவில் 3வது முறையாக அதிபராகிறார் ஜி ஜின்பிங்!மாவோவுக்கு அடுத்தார்போல் சக்திவாய்ந்த மனிதர்
சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீனாவிலிருந்து செயல்படும் ஊடகங்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு கடந்த ஒருவாரமாக நடந்து இன்றுடன் முடிந்தது. இதில் கட்சியின் சட்டத்தில் பல்வேறுதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, அதில் குறிப்பாக மீண்டும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கை தேர்ந்தெடுக்க முன்மொழியப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2296 உறுப்பினர்கள் பங்கேற்று, மத்தியக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். 205 முழு உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 22வது சட்டத்திருத்தம்: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
மத்தியக் குழுவினர் நாளை கூடி, அதிக அதிகாரம் கொண்ட 7 உறுப்பினர்கள் கொண்ட பொலிட் பியூரோ அல்லது நிலைக்குழுவை தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிலைக்குழுதான் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். பொதுச்செயலாளராக வருபவர்தான் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்படுவார்.
இந்த 7 பேர் கொண்ட பொலிட்பியூரோவில் 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர், 3 பேர் மட்டும் தொடர்கிறார்கள். நீக்கப்பட்ட 4 பேரில் சீன பிரதமராக இருக்கும் லீ கெக்கியாங்கும் ஒருவர்.
நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்துப் பேசியவரும், மிதான கம்யூனிஸ கொள்கைகளைக் கொண்டிருப்பவருமான லீ கெக்கியாங் பொலிட்பியூரோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
3-வது முறையாக சீன அதிபராவாரா ஜி ஜின்பிங்?கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நாளை முடிவு
பொலிட்பியுரோ உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டபின், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பவர் நாட்டின் ஊடகங்கள் முன் வருவார். இப்போது புதிய தலைவரை கட்சி அறிவிக்கும். அந்தவகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் 3வது முறையாக ஜி ஜின்பிங் தொடர்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன