Sri Lanka Crisis: இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 22வது சட்டத்திருத்தம்: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

By Pothy Raj  |  First Published Oct 22, 2022, 11:16 AM IST

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 22-வது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இருபங்கு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேறியது


இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 22-வது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இருபங்கு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேறியது

இலங்கையில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வரும் கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 225 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 22வது சட்டத்திருத்தத்துக்கு 174 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்

Tap to resize

Latest Videos

ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனா(எஸ்எல்பிபி) கட்சியின் எம்.பி. ஒருவர்மட்டும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தார். கோத்தபய ராஜபக்ச கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். 

குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - வைரலாகும் போட்டோஸ்

பிரதான எதிர்க்கட்சிகளான சமகி ஜனபாலவேகயா(ஐக்கிய மக்கள் சக்தி), தமிழ்கட்சிகளான, தமிழ்தேசியக் கூட்டணி, இடதுசாரிகளான ஜதிகா ஜனபாலவேகயா(தேசிய மக்கள் சக்தி) ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எஸ்எல்பிபி கட்சி, மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை விடுதலைக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் பெரும்பாலும் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். கடந்த 2015-19ம் ஆண்டு அதிபராக இருந்த சிறீசேனா மற்றும் விக்ரமசிங்கே அரசு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 19வது சட்டத்திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு

அதாவது அதிபரைவிட நாடாளுமன்றத்துக்கே அதிகமான அதிகாரம் இருக்கும் வகையில் 19வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, 19வது சட்டத்திருத்தத்துக்கு மாறாக 20ஏ திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றி, அதிபருக்கே அதிக அதிகாரங்கள் என்று கொண்டு வந்தார்.

இலங்கையில் சமீபத்தில் மோசமான பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு, பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் பெற வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்புசரிவு, அந்நியச் செலாவணி குறைந்தது போன்றவற்றால் இலங்கைப் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றது.

இதற்கு காரணமாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே இருவரையும் பதவியிலிருந்து இறக்கினர். இதைத் தொடர்ந்து அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இலங்கை நாடாளுமன்றம் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து, இலங்கை நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளி்க்கும் சட்டத்திருத்தம் தயாரிக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இலங்கையில் அதிகரிக்கும் சீன ராணுவ நடமாட்டம்: அலறும் உளவுத்துறை! தமிழகஅரசு கலக்கம்

இதன்படி அதிபரின்சில முக்கிய அதிகாரங்கள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் அடங்கிய அரசியலமைப்பு கவுன்சில் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், பொதுச்சேவை ஆணையம், தேசிய போலீஸ் ஆணையம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டது.
மேலும் ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையம், நிதி ஆணையம், அரசியல்தலைவர்கள் வழிநடத்தாத ஆணையங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

புதிய சட்டத்திருத்தத்தின்படி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் அரசியலில் நுழையவோ, அதிகாரமிக்க பதவிகள் வகிக்கவோ தடை விதிக்கிறது. குறிப்பாக பசில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் இனிமேல் இலங்கை அரசியலில் ஈடுபட முடியாது. 

”போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய நாவல்”- புகழ்பெற்ற ”புக்கர் விருது” வென்ற இலங்கை எழுத்தாளர்..

சர்வதேச அளவில் நிதியுதவி பெறுவதற்கு இலங்கைக்கு 22வது சட்டத்திருத்தம் முக்கியமானதாகும். சர்வதேச செலாவணி நிதியம், சர்வதேச வர்த்தக கூட்டமைப்பிடம் சட்டத்திருத்தம் நிறைவேற்றும் முன் இலங்கை அரசு தகவல் அளித்தது.

click me!