சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் முடிவில் கட்சியின் பொதுச்செயலாளராகவும் அதிபராகவும் 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் முடிவில் கட்சியின்பொதுச்செயலாளராகவும் அதிபராகவும் 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த ஓரு வாரமாக நடந்த மாநாடு, நாளையுடன்(22ம்தேதி) முடிகிறது. இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2296 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 205 முழு உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழு நாளை தேர்ந்தெடுக்கப்படும்.
இம்ரான் கான் அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை.. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு !
இந்த மத்தியக் குழு உறுப்பினர்கள் சேரந்து புதிய பொலிட் பியூரோவை தேர்ந்தெடுப்பார்கள், இந்த பொலிட்பியூரோ அல்லது நிலைக்குழுதான் அதிகாரமிக்க குழுவாகும். இந்த குழுதான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். இந்த பொதுச்செயலாளர்தான் சீனாவின் அதிபராக வருவார்.
தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரோவில் 25 உறுப்பினர்கள் உள்ளனர்,நிலைக்குழுவில் 7 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிபர் ஜி ஜின்பிங்கும் அடங்குவார்.
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த மாநாட்டின் முடிவில், 3வது முறையாக பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டு 3வது முறையாக அதிபராக வருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் புரட்சியாளர், கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் மாவோவுக்கு அடுத்தார்போல் நீண்டகாலம் அதிபராக இருக்கும் பெருமையை ஜின்பிங் பெற்றுவிட்டார். மாவோ 25 ஆண்டுகள்தான் அதிபராகஇருந்தார், ஆனால், 3வதுமுறையாகவும் அதிபராக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டால் 15வது ஆண்டை நிறைவு செய்வார்.
மாநாட்டின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிலைக்குழு உறுப்பினர்கள் ஊடகத்தின் முன் ஆஜராவார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதியஅரசாங்கம் பதவி ஏற்கும்.
பிரிட்டனின் அடுத்த பிரதமர் வாய்ப்பு இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு கிடைக்குமா?
சீனாவின் பிரதமராக இருக்கும் லீ கெக்கியாங்கிற்கு தற்போது 66 வயதாகிறது. சீன அரசின் ஓய்வு வயதான 68வயதை எட்டியவுடன் மீண்டும் பதவியில் தொடரப் போவதில்லை என லீ கெக்கியாங் தெரிவித்துவிட்டார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில், சீன அதிபராக ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபராக வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டன. ஹெய்டன் மாவட்டத்தில், சீன அதிபர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் வெளியேற வேண்டும், துரோகி, கொரோனா கட்டுபாடுகளை குறைக்க வேண்டும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சீன அதிபருக்கு எதிரான முழக்கங்களும் மக்கள் மத்தியில் எழுந்தாலும் 3வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக வருவதில் மாற்றம்இருக்காது எனத் தெரிகிறது
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டத்தின்படி ஒருவர் ஒருமுறைதான் அதிபராக வர முடியும்.ஆனால், ஜி ஜின்பிங் கடந்த முறை நடந்த மாநாட்டில் 2வது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் ஜின்பிங் வந்து தனக்கு ஏற்றார்போல் சட்டத்திருத்ததை செய்தார்.
ஹாங்காங்கை ரவுண்ட் கட்டியாச்சு.. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொடுத்த வார்னிங்! அச்சத்தில் உலக நாடுகள்
அது மட்டுமல்லாமல் சீனாவில் எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் செய்யவும், அதன் அதிகாரத்தைக் குறைத்து, ஒரு கட்சி, ஒரு அதிபர் என்ற முறையையும் கொண்டுவர ஜி ஜின்பிங் திட்டமிட்டுள்ளார்.