பிரிட்டனின் அடுத்த பிரதமர் வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரிட்டனின் அடுத்த பிரதமர் வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக், லிஸ் டிரஸிடம் தோல்வி அடைந்தார்.
XBB ஓமைக்ரான் வைரஸ்: மீண்டும் கொரோனா அலை வரலாம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உயர்வு ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் திணறினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, பல்வேறு சலுகைகள் அடங்கிய மினிபட்ஜெட்டை லிஸ் டிரஸ் அறிவித்தார்.இது பிரிட்டன் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி டாலருக்கு எதிராக பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பை கடுமையாகக் குறைத்தது.
இதையடுத்து, 45 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் லிஸ் டிரஸ் அளித்த பேட்டியில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா... பதவியேற்று ஆறு வாரங்களேயான நிலையில் அதிரடி முடிவு!!
இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதிஅமைச்சரான ரிஷி சுனக், கொரோனா காலத்தில் பிரிட்டனின் பொருளாதாரத்தை சிறப்பாகக் கொண்டு சென்று மக்களின் பாராட்டைப் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் லிஸ் டிரஸ் வரிச்சுலுகை, வரிக்குறைப்புகளை பட்ஜெட்டில் அறிவித்தபோது, பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்று ரிஷி சுனக் எச்சரித்தார்.
கடந்த புதன்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பில் இப்போது லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் இடையே போட்டி வைத்தால், அதில் ரிஷி சுனக் வென்று பிரதமராவார் எனத் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பில் 55 சதவீதம் பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தடுமாறும் லிஸ் ட்ரஸ்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா ரிஷி சுனக்? சூடுபிடித்த அரசியல் களம்!
பிரி்ட்டனின் அடுத்த பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இருந்தாலும், அடுத்த இடத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி மோர்டன் உள்ளார்.
3வது இடத்தில் பென் வாலஸும், 4வது இடத்தில் போரிஸ் ஜான்ஸும் உள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் பதவியை ராஜினாமா செய்த போரிஸ் ஜான்ஸனும் மீண்டும் பிரதமராக வாய்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.