பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
undefined
இதில் பலர் போட்டியிட்டனர். பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இருந்தனர். பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. செப்டம்பர் 5ல் முடிவுகள் வெளியாகின. இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். ரிஷி சுனக் தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரிட்டனின் 3வது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க..தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு
லிஸ் ட்ரஸ் நடவடிக்கை
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் மேற்கொண்ட நடவடிக்கையை அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலம் பணக்காரர்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை என்பது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகவும் அதிகமாக பாதித்துள்ளது.இதனால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.
நிதி அமைச்சர் நீக்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான உள்ளூர் கரண்சி பவுண்டின் விலை வீழ்ச்சி அடைந்ததோடு, கடன் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதில் இருந்து பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கருத்துக்கணிப்பு
இந்நிலையில் பெரும்பாலான கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. ‘YouGov’ என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு தான் தற்போது பிரிட்டன் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
மீண்டும் ரிஷி சுனக்
அதில் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலக வேண்டும் என்றும், அவர்களில் 55% பேர் 42 வயதான இந்திய வம்சாவளியின் முன்னாள் ஆலோசகர் ரிஷி சுனக்கிற்கு வாக்களிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 38 சதவீதம் பேர் மட்டுமே லிஸ் ட்ரஸ் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சனை 62 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தும் போரிஸ் ஜான்சன்
ஒருவேளை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தால், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த பிரதமராக வர வாய்ப்பு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.இங்கிலாந்து பிரதமர் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், இதுதான் முடிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வாரா என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!