வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ‘மோசமான நாள்’! கின்னஸ் உலக சாதனை அறிவிப்பு

By Raghupati RFirst Published Oct 18, 2022, 7:40 PM IST
Highlights

திங்கட்கிழமை வாரத்தின் மோசமான நாள் என்று கின்னஸ் உலக சாதனை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வாரத்தின் முதல் நாளான திங்கிழமை என்றாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை எல்லாருக்கும் திங்கட்கிழமை என்றாலே ஒரு மோசமான நாளாக தான் இருக்கிறது.

இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை

வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை என்று வந்தாலே வரும் மகிழ்ச்சி, திங்கள்கிழமை வந்தாலே ஒருவித சலிப்பு வருகிறது. கின்னஸ் உலக சாதனை திங்கட்கிழமையை மிக மோசமான நாளாக அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க..பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையை வாரத்தின் மிக மோசமான நாளாக கின்னஸ் உலக சாதனை (Guinness World Records) அமைப்பு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பலரும் திங்கட்கிழமை தான் உலகத்தின் மோசமான நாள் என்று சரியாக சொல்கிறீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

we're officially giving monday the record of the worst day of the week

— Guinness World Records (@GWR)

இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

click me!