பறவை ஒன்று தனது வாயில் இருந்து புகையை கக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பறவை ஒன்று தனது வாயில் இருந்து புகையை கக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் எப்போதும் அரிதான விஷயங்களை படம் பிடிப்பது வழக்கம். அந்த வகையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஒரு பறவையை படம் பிடித்துள்ளார். அந்த பறவை செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்த் ரூபனகுடியின் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஒரு வெள்ளைப் பறவை, பச்சை-நீல நிற கழுத்துடன், கத்தியது.
இதையும் படிங்க: பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு
பின்னர் இறுதியாக வாயிலிருந்து புகை விட்டது. இதை காணுகையில் அந்த பறவை புகைப்பிடிப்பது போல் இருந்தது. இந்த வீடியோதான் இணைய பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பறவையை வெற்று தொண்டை பெல்பேர்ட்( Bare-throated bellbird) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இது பிரேசிலில் உள்ள பறவை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ”போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய நாவல்”- புகழ்பெற்ற ”புக்கர் விருது” வென்ற இலங்கை எழுத்தாளர்..
இதன் சத்தம் மணி அடிப்பது போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வீடியோ அதிக பார்வைகளை பெற்றதோடு பலரால் பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்று, கடந்த மாதம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தை பிரதிபலிக்கும் ஒரு போவர்பேர்ட் (Bowerbird) வீடியோ இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.
Popularly called the smoking bird - such a beauty! Wonder what it's actually called! pic.twitter.com/QUrI9CQqZI
— Ananth Rupanagudi (@Ananth_IRAS)