கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை பொருளாதாரம்
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பொதுமக்கள் அவதியை சந்தித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு
இலங்கையில் பல்வேறு குடும்பங்கள் முறையாக உணவு உண்பதற்கே வழியின்றி தவிக்கின்றனர். அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல குழந்தைகள் பட்டினியுடன் இரவு படுக்க செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்
பட்டினி கிடக்கும் இலங்கை மக்கள்
பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. பல்வேறு குடும்பங்கள் முறையாக உணவு உண்பதற்கே வழியின்றி தவிக்கின்றனர். அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல குழந்தைகள் பட்டினியுடன் இரவு படுக்க செல்கின்றனர். தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை பல குழந்தைகளின் நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொழில்
இந்நிலையில் சட்டவிரோதமாக இலங்கை பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இலங்கை பெண்களை சுற்றுலா விசாவில் துபாய் நாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர்களை அங்கு பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகமாகி கொண்டே வருவதால், இலங்கை பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாகவும், மேலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி பாலியல் தொழிலை செய்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?
ஸ்லீப்பர் செல்ஸ்
இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் சீனா அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளை பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதான ஒரு செய்தியை தமிழக உளவுத்துறை விடுத்துள்ளது என்றும், சாதாரணமான எச்சரிக்கை தான் இது என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையை தளமாகக் கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் சில சீன முகவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ரகசியமாக நுழைந்ததாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, வடக்கில் உள்ள கடலட்டைப் பண்ணைகளில் சீனா சில அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளைப் பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபடுவதான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை