அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 80 சதவீத உயிர்களைக் கொல்லும் திறனுடைய ஓமைக்ரான்(hybrid omicron) வைரஸை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த சீனாவின் உஹானில் உருவாகிய உண்மையான வைரஸை கலந்து உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 80 சதவீத உயிர்களைக் கொல்லும் திறனுடைய ஓமைக்ரான்(hybrid omicron) வைரஸை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த சீனாவின் உஹானில் உருவாகிய உண்மையான வைரஸை கலந்து உருவாக்கப்பட்டது.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எலிகள் உடலில் இந்த வைரஸை செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் 80 சதவீதம் உயிரிழப்பைச் சந்தித்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இயற்கையில் உருவான ஓமைக்ரான் வைரஸைவிட மிகவும் மோசமான விளைவுகளை கொடுக்கக்கூடியது.
ஆனால், வழக்கமான ஓமைக்ரான் வைரஸை இந்த எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதித்தபோது, அந்த எலிகள் லேசான வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டன ஆனால் உயிரிழப்புகளைச் சந்திக்கவில்லை.
ஆனால், மனித உடலில் இந்த கொடூர ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களை ஆய்வு செய்தபோது, வழக்கமான ஓமைக்ரான் வைரஸைவிட 5 மடங்கு தீவிரமான பாதிப்பை தருவதாக இருந்தது.
ஆதலால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஓமைக்ரான் வேகமாக பரவி, வேகமாக குறைந்து விட்டது.. 3வது அலை முடிஞ்சே போச்சு.. பட்டைய கிளப்பிய மா.சு
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நேஷனல் எமர்ஜிங் இன்பெக்சியஸ் டிசீஸ் லேபரேட்டரிஸ் அந்நாட்டில் உள்ள லெவல்-4 பயோசேப்டி ஆய்வகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
இந்த ஆய்வகங்கள் மோசமான பேரழிவுகளை உருவாக்கக்கூடிய வைரஸ்களை கையாள திறன் பெற்றது. டெஸ்சாஸ், அட்லாண்டா, மன்ஹாட்டன், கனாஸில் மட்டும் இந்த சேப்டி-4 லேப்கள் உள்ளன
பாஸ்டன் மற்றும் ப்ளோரிடாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவினர் நடத்திய புதிய ஆய்வில், ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் மனிதர்களின் செல்களை ஊடுருவும் வகையில் புதிய கட்டமைப்பை பெற்றுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் என்பது, சீனாவின் உஹானில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான வைரஸுடன் இணைத்து உருவாக்கப்பட்டது.ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் குறித்து ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
ஆய்வக்தில் உள்ள எலிகளுக்கு வழக்கமான ஓமைக்ரான் வைரஸ் உடலில் செலுத்தியபோது லேசான, உயிரிழப்பு ஏற்படுத்தாக அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஓமைக்ரான்-எஸ் வகை வைரஸை உடலில் செலுத்தியபோது அது தீவிரமான பாதிப்புகளையும், 80 சதவீதம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
ஓமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் இருக்கும் மாறுபாடுதான், தொற்றின் தீவிரத்துக்கு காரணம், மற்ற பகுதிகளின் மாற்றத்தையும் தீர்மானித்து, உயிர்கொல்லியாக மாறுகிறது.
உஷார்… கொரோனா பாதித்தவர்களை ஓமைக்ரான் எளிதாக தாக்கும்… எச்சரிக்கை விடுக்கும் WHO!!
மனிதர்களின் நுரையீரல் பகுதியில் உள்ள செல்களில் வளரும் பல்வேறு வகையான உருமாற்ற கொரோனா வைரஸ்களையும் இதில் ஆய்வு செய்தோம். அதில் மனிதர்களின் உடலில் இருக்கும் கோவிட்வைரஸின் ஸ்பைக் புரதம் ஆரோக்கியமாக இருக்கும் செல்களின் மூலமே பிரதியெடுக்க அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு வைரஸும் தனது ஸ்பைக் புரதத்தின் மூலம் எத்தனை பிரதிகளை எடுக்க முடியும் என்பதையும் ஆய்வாளர்கள் அளவிட்டுள்ளனர்.
அந்த வகையில் புதிதாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ், ஓரிஜினல் ஓமைக்ரான் வைரஸைவிட, 5 மடங்கு தீவிரத்தன்மை கொண்ட பிரதிகளை உருவாக்குகிறது. ஆனால் எலிகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்பைப் போல் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுத்த வாய்ப்பில்லை.
ஆனால் நாங்கள் குறிப்பிட்ட வகை எலிகளை மட்டுமே இதற்கு பயன்படுத்தினோம், ஆனால், மனிதர்களின் உடல் செல்களை ஒத்திருக்கும் எலிகளை இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தவில்லை. மனிதர்களின் டிஎன்ஏவும், எலிகளின் டிஎன்ஏவும் வெவ்வேறானவை, அவற்றின் எதிரிவினையும் வேறுபட்டதாக இருக்கும்.
சீனாவை கலங்கவைக்கும் ஓமைக்ரான் வைரஸ்:புதிய வகைகள் கண்டுபிடிப்பு: ஒரேநாளில் 2,000 பேர் பாதிப்பு
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட எலிகளின் வகையானது, கடுமையான கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிவதற்காக உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது, மனிதர்களுக்கு ஏற்படும் கோவிட் பாதிப்பு குறித்து எந்த எலிகளும் பிரதிபலிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.