ரஷ்யா அரசு தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் :
உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களாக ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை கைப்பற்றியுள்ளது. எனினும், ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து உக்ரைன் ராணுவம் தீரத்துடன் சண்டையிட்டு பதிலடி கொடுத்து வருகிறது.
கடும் பாதிப்புகள் :
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மின் நிலையம் மீது ரஷ்யா நேற்று கடும் தாக்குதலை நடத்தியது. பெரிய அளவிலான இந்த ஏவுகணைத் தாக்குதலில் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கீவ் நகர மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க..அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஐநா சபை :
இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. இதனால், ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கற்பழிக்கப்படும் உக்ரைன் பெண்கள் :
இதுபற்றி பேசிய அவர், ‘செப்டம்பரின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையை குறிப்பிட்டு, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட. பெண்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
இதையும் படிங்க..சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்
வயாகரா :
சிறு பையன்களும்,ஆண்களும் பலாத்காரம் செயப்படுகின்றனர். தொடர் பிறப்புறுப்பு சிதைவுகளைப் பார்க்கும்போது ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கபட்ட பெண்கள் சாட்சியமளித்து உள்ளனர். இதுவும் ஒரு இராணுவ உத்தியாக உள்ளது. ரஷ்யப் படைகளால் நடத்தபட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதிப்படுத்தியது.
மேலும், சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வயது நான்கு முதல் 82 வயது வரை இருக்கும்.அறிக்கை செய்யப்பட்ட வழக்குகள் ஒரு சிறிதளவு மட்டுமே' என்று கூறியுள்ளார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!