ஹாங்காங்கை ரவுண்ட் கட்டியாச்சு.. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொடுத்த வார்னிங்! அச்சத்தில் உலக நாடுகள்

By Raghupati R  |  First Published Oct 16, 2022, 10:02 PM IST

கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


சீன அதிபர் ஜி ஜின்பிங் :

சீனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று முதல் அக்டோபர் 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

சீனா - தைவான் சர்ச்சை :

கிட்டத்தட்ட சுமார் 2,300 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசிய உரை உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. ஜி ஜின்பிங் உரை நிகழ்த்தும் போது, ‘ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தைவான் பிரிவினைவாதம் மற்றும் தலையீட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு பெரிய போராட்டத்தை உறுதியுடன் நடத்தியுள்ளோம்.

இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !

தேச மறு ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய புத்துணர்ச்சியின் மூலம் வரலாற்றுச் சக்கரங்கள் முன்னோக்கிச் செல்கின்றன. மேலும் நமது தாய்நாடு தனது முழுமையான மறு ஒருங்கிணைப்பை அடைய வேண்டும், அது அடையப்பட வேண்டும்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கும் எங்களின் வலுவான உறுதியையும் திறனையும் வெளிப்படுத்துகிறோம்.

மீண்டும் அதிபர் :

96 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, மனித வரலாற்றில் வறுமைக்கு எதிரான மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றிருக்கிறது’ என்று பேசினார். சீனாவில் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்ற சட்டம் இருந்தது. 2017ல் மீண்டும் பதவியேற்ற போது அந்த சட்டத்தை நீக்கிவிட்டார். இந்த நிலையில் 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்

தைவான் பதிலடி :

பிறகு தைவான் அதிபர் மாளிகையில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,’சீன குடியரசு என்பது இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடு. தைவான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தேசிய இறையாண்மையை பொறுத்தவரையில் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான முடிவில் எந்த சமரசமும் இல்லை. போர் புரிய வேண்டும் என்பது எங்களின் விருப்பமல்ல. இதுதான் தைவான் மக்களின் ஒருமித்த கருத்து’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் பதற்றம் உண்டாகியிருக்கிறது.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

click me!