வாழ்நாள் முழுவதும் அதிபராகும் ஜின்பிங்! கம்யூனிஸ்ட் மாநாட்டில் எல்லாமே தயார்! கடைசியில் எல்லாமே போச்சா!

By Raghupati RFirst Published Oct 16, 2022, 12:24 AM IST
Highlights

20வது கட்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்:

சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி என்பதன் சுருக்கமே சிசிபி (CCP) ஆகும்.  சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்தவர்களே அங்கு தலைமை பொறுப்புக்குக் கொண்டு வரப்படுவார்கள். சீனாவில் ஜனநாயக ஆட்சி முறை இல்லை என்பதால் தேர்தல் மூலம் அங்கு ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் தான் அதிபர் யார் என்பது தேர்வு செய்யப்படும். இந்த மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த அமைப்பு கருதப்படுகிறது.

இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

சீன கம்யூனிஸ்ட் கட்சி:

பொதுவாக 5 அல்லது 6 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2,300 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். அனைத்து தரப்பு மக்கள், பல துறை வல்லுநர்கள், அனைத்துக்குழு பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த குழு இருக்கும்.சீனா முழுவதும் உள்ள பத்து மில்லியன் கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பெய்ஜிங்கில் சுமார் 2,300 மூத்த கட்சி உறுப்பினர்கள் கூடுவார்கள்.

அவர்களில், 200 பேர் மத்திய குழுவில் வாக்களிக்கும் உரிமையுடன் உள்ளனர். மேலும் 170 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 25 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட்பீரோவைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தக் குழு பொறுப்பாகும். அதில் ஏழு சக்திவாய்ந்தவர்கள் பொலிட்பீரோ நிலைக்குழுவில் (பிஎஸ்சி) நியமிக்கப்படுகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் அதிபர்:

பத்து ஆண்டுகளுக்குப் பின் அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள். அப்படி 2012இல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால் தான் ஜி ஜின்பிங்கிற்கு அதிபர் பதவி கிடைத்தது. ஆனால் ஜி ஜின்பிங்கோ, வாழ்நாள் முழுவதும் சீனாவின் அதிபராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான ஏற்பாடு தான் இது என்றும், இந்த மாநாட்டின் முடிவில் அத்தகைய தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

போராட்டத்தில் மக்கள்:

இது ஒருபக்கம் இருப்பினும், மற்றொரு பக்கம் அதிபருக்கு எதிராக பெய்ஜிங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகளை பெய்ஜிங்கில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தொங்கவிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

கவனிக்கும் உலக நாடுகள்:

 சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது சீன அதிபரான ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். மீண்டும் அவரே அதிபராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்நேரத்தில், அவருக்கு எதிராக வெளிப்படையாக நடந்துள்ள போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பத்தை உலக நாடுகளும் தீவிரமாக கவனித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

click me!