Hunger index: உலகப் பட்டினிக் குறியீடு: 121 நாடுகளில் இந்தியாவுக்கு 107-வது இடம்: இலங்கையைவிட மோசம்

By Pothy RajFirst Published Oct 15, 2022, 10:56 AM IST
Highlights

உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்நிலையில் பின்தங்கியுள்ளது.

உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்நிலையில் பின்தங்கியுள்ளது.

உலக பட்டினிக் குறியீட்டை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சரிவிகித உணவு, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம், எடை இல்லாது இருதல், சிசுஉயிரிழப்பு ஆகியவற்றை தேசிய, மாநில,மண்டல அளவில் ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டது.

அணு குண்டு வீசுவோம்! உலகப் பேரழிவு ஏற்படும்: நேட்டோவுக்கு அதிபர் புதின் எச்சரிக்கை

 இதில், 121 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டது.கடந்த ஆண்டு 106 நாடுகளில் 101வது இடத்தில் இருந்தது. 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இருந்தது. 

தெற்காசியாவில் உள்ள நாடுகளில் போர்சூழல் நிலவும் ஆப்கானிஸ்தானைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாதான் கடைசி இடத்தில் இருக்கிறது. இதில் பூஜ்ஜியம் இடத்தில் ஒரு நாடு இருந்தால் பட்டினி என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால் 100வது இடத்தில் இருந்தால் மிகமோசமாகும்

அந்த வகையில் தீவிரமான பிரிவு(சீரியஸ்)  பட்டியலில் இந்தியா 29.1 மதிப்பெண்களுடன் உள்ளது. இலங்கை 64வது இடத்திலும், நேபாளம் 81வது இடத்திலும் வங்கதேசம் 84வது இடம், பாகிஸ்தான் 99வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 109வது இடத்திலும் நேபாளம் 81, மியான்மர் 84வது இடத்திலும் உள்ளன. இந்தியா 107வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானைத் தவிர்த்துப் பார்த்தால் தெற்காசியாவில் இந்தியாதான் மோசமான இடத்தில் உள்ளது.

வைரல் வீடியோ!மூல்தான் மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் 200 உடல்கள்:பாகிஸ்தான் அரசு விசாரணை

5-க்கும் குறைவான மதிப்பெண்களுடன் முதல் 17 இடங்களில் 17 நாடுகள் உள்ளன
குழந்தைகள் உயரத்துக்கு ஏற்றார்போல் எடை இல்லாமல் இருக்கும் சைல்ட் வேஸ்டிங்கிலும், இந்தியா 19.3% பெற்று மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் 15.1 சதவீதம் இருந்தநிலையில், 2020ம் ஆண்டில் 17.15% இருந்தநிலையில் அதைவிட மோசமடைந்துள்ளது.

இந்தியா இரு காரணிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. முதலாவதாக குழந்தைகளுக்கான சரிவிகிதசத்துணவு குறைபாட்டில் 38.7 சதவீதத்திலிருந்து 35.5 ஆகக் குறைந்துள்ளது, சிசு மரணத்தில் 4.6 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாகக் சரிந்துள்ளது.

உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் கடந்த 2014ம் ஆண்டில் 28.2 சதவீதமாகஇருந்த இந்தியா 2022ம் ஆண்டில் 29.1 சதவீதமாக சரிந்துள்ளது. குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்கின் மூத்த கொள்கை அதிகாரி லாரா ரீனெர் கூறுகையில் “ உலக பட்டினிக் குறியீடு கடந்த ஆண்டு மதிப்பை வைத்து மட்டும் கணக்கிடவில்லை, 2017 முதல் 2021ம்ஆண்டு புள்ளிவிவரங்களை வைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட சில நாடுகள்தான் தாக்குப்பிடிக்கின்றன: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ஒவ்வொரு 4 ஆண்டுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையாகவே கணக்கிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்
உலக பட்டினிக் குறியீட்டில் ஜாம்பியா, ஆப்கானிஸ்தான், தைமூர் லெஸ்டே, கினியா பிசாவு, சியரா லியான், லெசோதோ, லைபீரியா, நைஜர், ஹெய்தி, சாட், காங்கோ குடியரசு, மடகாஸ்கர், மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, ஏமேன் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கும் கீழாக உள்ளன. கினியா,மொசாம்பிக், உகான்டா, ஜிம்பாப்வே, பரூண்டி, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள்அளித்த புள்ளிவிவரங்கள் உண்மைத்தன்மையில் இல்லை.

click me!