இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற புக்கர் விருதை இந்தாண்டு இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான புனைகதை புக்கர் பரிசு போட்டியில் உலக முழுவதிலிருந்தும் 165 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இலக்கிய துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் புக்கர் பரிசு போட்டிக்கு அனுப்பப்படுகின்றன.
மேலும் படிக்க:UNDP India: இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய " seven moons of mali almeida" என்ற நாவலுக்கு இந்தாண்டிற்கான புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நாவல் விடுதலை புலிகள் - இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை எடுத்துரைக்கிறது.
புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு இன்னொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதே வேளையில் அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க:Omicron : 80% உயிர்களைக் கொல்லும் கொடூர ஓமைக்ரான் வைரஸ்: அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
இந்த விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள பிரபல ரவுண்ட்ஹவுஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும் ராணியுமான கமீலா கலந்துகொண்டார்