பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா... பதவியேற்று ஆறு வாரங்களேயான நிலையில் அதிரடி முடிவு!!

By Narendran S  |  First Published Oct 20, 2022, 6:23 PM IST

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் இன்று (வியாழனன்று)பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் இன்று (வியாழனன்று)பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற ஆறு வாரங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொடுத்த வாக்குறுதியின்படி, பொருளாதார திட்டங்களை கொண்டு வராததால், தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது. இவரது ராஜினாமாவை அடுத்து இந்திய வம்சா வழியான ரிஷி சுனக் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே பிரிட்டனில் விலைவாசி உயர்ந்து வந்த நிலையில், 45 பில்லியன் ( British pound sterling) BPS அளவிற்கு வரிக் குறைப்புகள் செய்தார். அவற்றை ஆதரிக்க விரிவான நிதித் திட்டம் இல்லாத்தால், மேலும் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று விமர்சிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: தடுமாறும் லிஸ் ட்ரஸ்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா ரிஷி சுனக்? சூடுபிடித்த அரசியல் களம்!

Tap to resize

Latest Videos

இதுக்குறித்து பேசிய லிஸ் ட்ரஸ், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது, தனது கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதால், நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. சூழ்நிலையின் அடிப்படையில், கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை என்னால் வழங்க முடியாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எனவே நான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை அறிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - வைரலாகும் போட்டோஸ்

முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான உள்ளூர் கரண்சி பவுண்டின் விலை வீழ்ச்சி அடைந்ததோடு, கடன் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதில் இருந்து பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமராக இருந்த ஆறு வாரங்களில் ட்ரஸ் தனது அனைத்து கொள்கைத் திட்டத்தையும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மூத்த அமைச்சர்களில் இருவரை ட்ரஸ் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!