எம்பி பதவியில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, கடந்த ஏப்ரலில் 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே புதிய பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
undefined
இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!
இந்நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை பொதுபதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?