சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார மாநாடு முடிந்தநிலையில், அந்நாட்டின் அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார மாநாடு முடிந்தநிலையில், அந்நாட்டின் அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு அடுத்தார்போல் அதிகமான காலம் அதிபராக இருப்பவர், சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமையை ஜி ஜின்பிங் பெற உள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த ஓரு வாரமாக நடந்த மாநாடு, இன்று முடிந்தது. இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2296 உறுப்பினர்கள் பங்கேற்று, மத்தியக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். 205 முழு உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டின் முடிவில், பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அதிகமான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டது.
இந்த மத்தியக் குழுதான் கட்சியையும் அரசையும் நிர்வகிக்கும் குழுவாகும். கட்சியையும், நாட்டையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்தும். இந்த கூட்டத்தில் தற்போது அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்கை(வயது69) மீண்டும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க முன்மொழியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
3வது முறையாக அதிபரா? ஜி ஜின்பிங்கிற்கு சீனாவில் எதிர்ப்பு! பேனர் வைப்பு !
கடைசி நாளான இன்று நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று உரையாற்றினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த மத்தியக் குழுவினர் நாளை கூடி, அதிக அதிகாரம் கொண்ட 7 உறுப்பினர்கள் கொண்ட பொலிட் பியூரோ அல்லது நிலைக்குழுவை தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிலைக்குழுதான் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். பொதுச்செயலாளராக வருபவர்தான் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்படுவார்.
அந்த வகையில் ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங்கை மத்தியக் குழுமுன்மொழிந்துவிட்டது. கடந்த 2012ம் ஆண்டிலிருந்து ஜி ஜின்பிங் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்த முறையும் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரே 3வது முறையாக அதிபராகவருவார்.
இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை
தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடந்தபின் ஜி ஜின்பிங் மற்றும் புதிய நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஊடகத்தின் முன் வருவார்கள். அதுவரை யாருக்கு பதவி என்பது தெரியாது.
ஜி ஜின்பிங்கைத் தவிர அனைத்து நிலைக்குழு, மத்தியக் குழுவினர் அனைவரும் மாற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் ஜி ஜின்பிங் மட்டும் தொடர்ந்து அதிபராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தொடர்வார்.