விந்தணு தானம் செய்யக்கூடாது.. 550 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நபருக்கு நீதிமன்றம் தடை..

By Ramya s  |  First Published Apr 29, 2023, 6:04 PM IST

நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் தனது விந்தணுக்களை தானம் செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபர், விந்தணு தானம் செய்து வருகிறார். 2007ல் விந்தணு தானம் செய்யத் தொடங்கியதிலிருந்து 550 முதல் 600 குழந்தைகளை உருவாக்க அவர் தனது விந்தணுவை தானம் செய்துள்ளர். எனினும் 2017ல், அவர் நெதர்லாந்தில் உள்ள கருவுறுதல் கிளினிக்குகளுக்கு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் வெளிநாடுகளிலும் ஆன்லைனிலும் விந்தணுக்களை தானம் செய்வதை தொடர்ந்தார். விந்தணு தானம் செய்ததன் மூலம் 550 குழந்தைகளுக்கு இவர் தந்தையாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் அந்த குழந்தைகளில் ஒருவரின் தாய் ஜொனாதன் ஜேக்கப்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நன்கொடையாளர் " கடந்த காலத்தில் அவர் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து வருங்கால பெற்றோருக்கு தவறான தகவல் அளித்துள்ளார். எனவே தனது விந்துவை தானம் செய்வதை நீதிமன்றம் தடை செய்கிறது. மீண்டும் நன்கொடை அளிக்க முயற்சித்தால், 100,000 யூரோக்களுக்கு மேல் (ரூ. 90,41,657) அபராதம் விதிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க : ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..

ஜொனாதன் ஜேக்கப் தனது விந்தணுவை குறைந்தது 13 கிளினிக்குகளுக்கு தானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 11 கிளினிக்குகள் நெதர்லாந்தில் உள்ளன. அந்நாட்டின் மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, விந்து தானம் செய்பவர்கள் 12 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தானம் செய்யக்கூடாது அல்லது 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்கக்கூடாது என்ற விதிகள் உள்ளது. 

இருப்பினும், கருவுற முடியாத பெற்றோருக்கு உதவ விரும்புவதாக நன்கொடையாளரின் வழக்கறிஞர் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். இசைக்கலைஞரான ஜொனாதன் ஜேக்கப் தற்போது கென்யாவில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2 ஆண்குறிளுடன் ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

click me!