2 ஆண்குறிளுடன் ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

By Ramya s  |  First Published Apr 29, 2023, 2:21 PM IST

பாகிஸ்தானில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன் பிறந்துள்ளது.



குழந்தைகள் அரிதான நிலைமைகளுடன் பிறப்பது என்பது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. மருத்துவ உலகமே வியக்கும் வகையில், பல குழந்தைகள் அசாதாரண உறுப்புகளுடன் பிறக்கின்றன. அந்த வகையில், பாகிஸ்தானில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன் பிறந்துள்ளது. ஆனால் இந்த குழந்தைக்கு ஆசனவாய் இல்லை. இந்த நிலையை மருத்துவர்கள் டிபாலியா (diphalia) என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த குழந்தை இரண்டு ஆண்குறிகளையும் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கூறினார். இந்த அரிய மருத்துவ நிலை காரணமாக குழந்தைக்கு இரண்டு சாதாரண வடிவ பிறப்பு உறுப்புகள் உள்ளன. இந்த அரிய நிலை ஆறு மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு ஆணுறுப்பு மற்றொன்றை விட ஒரு சென்டிமீட்டர் நீளமானது என்றும் இரண்டும் சிறுநீர் கழிக்கக்கூடியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் 6,000 கோடி முதல் 8,000 கோடி முதலீடு செய்ய உள்ள பிரபல நிறுவனம்..

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டான். பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு நபரின் உயிருக்கு ஆபத்தானது அல்ல. ஆனால் டிஃபாலியா எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெளிவாக இல்லை.

உலகில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோன்ற 100 டிப்லியா பாதிப்புகள் மருத்துவத் துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. 

டிஃபாலியாவை ஏற்படுத்தும் ஆபத்து காரணி எதுவும் அறியப்படவில்லை என்றாலும், கருப்பையில் பிறப்புறுப்புகள் உருவாகும் போது இது உருவாகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பகுதியளவு டிஃபாலியா பாதிப்பு ஏற்பட்டால், அதனை அறுவைசிகிச்சை மூலம் அகற்றலாம். அதே நேரத்தில் நோயாளியின் அசௌகரியத்திற்கு ஏற்ப முழுமையான டிஃபாலியா சிகிச்சையளிக்கப்படலாம்.  டிஃபாலியா நோயாளிகளில் 1 சதவீதம் பேர் தங்கள் மலக்குடலில் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க : கோல்டன் குளோப் பந்தயத்தில் இந்திய வரலாற்றை எழுதிய அபிலாஷ் டாமி.. புதிய சாதனை படைத்து அசத்தல்..!

click me!