“ பி.எல்.ஏ-வின் அத்துமீறல்கள் உறவுகளை சிதைத்துவிட்டன.. ” சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் தகவல்

Published : Apr 28, 2023, 11:11 AM ISTUpdated : Apr 28, 2023, 11:22 AM IST
 “ பி.எல்.ஏ-வின் அத்துமீறல்கள் உறவுகளை சிதைத்துவிட்டன.. ” சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் தகவல்

சுருக்கம்

தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபுவிடம் தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்பு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். இந்த கூட்டத்திற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் சீன பிரதமர் லி ஷாங்ஃபுவிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போதைய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளின்படி, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். மேலும் சீன-இந்தியா உறவுகளின் வளர்ச்சியானது எல்லைகளில் அமைதி நிலவுவதை அடிப்படையாகக் கொண்டது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க : போர் காரணமாக பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.. இந்திய கார்கள், உணவுப் பொருட்களை குறிவைக்கும் ரஷ்யா..

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா - சீனா அமைச்சர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  சீன ராணுவத்திலும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த மோதலில் 4 பேர் மட்டுமே இறந்ததாக சீனா கூறியது. இதைத் தொடர்ந்து இந்திய சீன எல்லையில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண இரண்டு நாடுகளின் ராணுவ தலைமை 18 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ, கோக்ரா உயரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே டெல்லில்யில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய பாதுகாப்பு நிலைமை, ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
  
சீன பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்ஃபு, தஜிகிஸ்தானின் கர்னல் ஜெனரல் ஷெராலி மிர்சோ, ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா கரே அஷ்டியானி மற்றும் கஜகஸ்தானின் கர்னல் ஜெனரல் ருஸ்லான் ஜாக்சிலிகோவ் ஆகியோர் ஏற்கனவே தேசிய தலைநகருக்கு வந்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் தலைமையில் நடைDuring his talks with Chinese counterpart Li Shangfu, the Indian defence minister made it clear that all issues பெறும் கூட்டத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவரது சகாக்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் கலந்து கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க : நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு