10-வது பேட்ச் இந்தியர்களை போர்ட் சூடானில் இருந்து சவுதி நகரமான ஜெட்டாவிற்கு வெளியேற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு 'ஆபரேஷன் காவேரி' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. நாட்டின் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் மூலம் சூடானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் கீழ், சூடானில் இருந்து வெளியேற்றும் இந்தியர்களை சவுதி அரேபிய நகரமான ஜெட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவர்கள் நாடு திரும்பினர். சவுதி அரேபிய நகரமான ஜெட்டாவில் போக்குவரத்து வசதியை இந்தியா அமைத்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் வெளியேற்றும் பணியை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், 10-வது பேட்ச் இந்தியர்களை போர்ட் சூடானில் இருந்து சவுதி நகரமான ஜெட்டாவிற்கு வெளியேற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஆபரேஷன் காவேரி திட்டம் மேலும் முன்னேறுகிறது. IAF C-130J விமானத்தில், 10-வது பேட்ச்சாக 135 இந்தியர்கள் போர்ட் சூடானில் இருந்து ஜித்தாவிற்கு புறப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : போர் காரணமாக பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.. இந்திய கார்கள், உணவுப் பொருட்களை குறிவைக்கும் ரஷ்யா..
இதனிடையே மீட்கப்பட்ட 121 இந்தியர்களின் எட்டாவது குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை அன்புடன் வரவேற்றார். அவர் "ஒரு துணிச்சலான மீட்பு! சூடானின் வாடி செய்ட்னாவிலிருந்து IAF C 130 J விமானம் மூலம் 121 இந்தியர்களைக் கொண்ட 8வது குழு ஜெட்டாவை வந்தடைந்தது. இடம் கார்ட்டூம் அருகே இருப்பதால் இந்த வெளியேற்றம் மிகவும் சிக்கலானது. நமது தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருந்தனர். அன்பான வரவேற்பு," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, ஆபரேஷன் காவேரி நடவடிக்கையின் வழிமுறைகள் குறித்த சிறப்பு விளக்க கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் அவர்களுக்கு உதவுவதும் அரசாங்கத்தின் கவனம் உள்ளதாக அவர் கூறினார்.
"மேலும், மோதல் வெடித்தவுடன், வெளியுறவு அமைச்சகம் 24/7 கட்டுப்பாட்டு அறையை அமைத்தது. அந்த கட்டுப்பாட்டு அறையை அமைத்து. இந்த கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கும். தற்போதைய சூழ்நிலையை சமாளித்து அதை முழுமையாக தீர்க்கும் வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியா கிட்டத்தட்ட 2000 பேரை சூடானில் வெளியேற்றியுள்ளது..” என்று தெரிவித்தார்.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே நடக்கும் சண்டையால் ஆப்பிரிக்க நாடான சூடானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சூடானின் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான படைகளுக்கும் முகமது ஹம்தான் டாக்லோ தலைமையில் கீழ் செயல்படும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றி வருவதால் அங்கு தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Karnataka Elections : 6 நாட்களில் 22 பேரணிகள்.. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி..