பெரு நகரங்களில் வீடு வாங்கும் வெளிநாட்டிருக்கான முத்திரை கட்டணத்தை சிங்கப்பூர் அரசு இரட்டிப்பாக்கி உள்ளது.
ஆசியாவில் வாழ்க்கை செலவு அதிகமாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம், பெரு நகரங்களில் வீடு வாங்கும் வெளிநாட்டிருக்கான முத்திரை கட்டணத்தை சிங்கப்பூர் அரசு இரட்டிப்பாக்கி உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை கட்டுக்குள் வைக்கவும், ரியல் எஸ்டேட் விலையை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கப்பூரில் வீடு வாங்க திட்டமிடும் வெளிநாட்டு மக்கள் இனி முத்திரைத்தாள் கட்டணத்தை 2 மடங்கு செலுத்த வேண்டும்.
ஒரு நிலையான ரியல் எஸ்டேட் சந்தையை உருவாக்குவதுடன், சிங்கப்பூர் மக்களுக்கு வீட்டு வசதிக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, வெளிநாட்டினருக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை 60 சதவீதமாக உயர்த்தி உள்ளது. மேலும் சிங்கப்பூர் மக்கள் 2-வது வீட்டை வாங்குவோருக்கான முத்திரைத்தாள் கட்டணம் 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : இலங்கை செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்..
அதே போல், 3-வது வீட்டை வாங்குவோருக்கான முத்திரைத்தாள் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூர் மக்கள் தங்கள் முதல் சொந்த வீட்டை வாங்கும் எந்த வித முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிங்கப்பூர் குடிமக்களாக இருக்கும் போது, முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தினாலும் அதனை முறையாக விண்ணப்பித்து ரீ-ஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம்.
இது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு மக்களுக்கு பின்னடைவாக உள்ளது. எனினும் சிங்கப்பூர் நாட்டு மக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் ரியல் எஸ்டேட்டின் மதிப்பு நாளுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் வீடு வாங்குவது என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஆனால் அதே நேரம் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரும், பணக்காரர்களும் அதிகமாக வீடு வாங்கி வருவதால் பிரச்சனை மேலும் சிக்கலாகி உள்ளது.
எனவே இந்த பிரச்சனைகளை சமாளிக்க சமாளிக்க சிங்கப்பூர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வீட்டுக்கடன்களை வழங்குவதிலும் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “ பி.எல்.ஏ-வின் அத்துமீறல்கள் உறவுகளை சிதைத்துவிட்டன.. ” சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் தகவல்