Bilawal Bhutto :மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்:பூட்டோவுக்கு சூபி கவுன்சில் கண்டனம்

Published : Dec 17, 2022, 12:12 PM IST
Bilawal Bhutto :மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்:பூட்டோவுக்கு சூபி கவுன்சில் கண்டனம்

சுருக்கம்

பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்களைவிட, பிரதமர் மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு அனைத்து இந்திய சூபி சாஜாதனாஷின் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்களைவிட, பிரதமர் மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு அனைத்து இந்திய சூபி சாஜாதனாஷின் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட ரீதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். பிலாவல் பூட்டோ கூறுகையில் “ நான் இந்தியாவுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் உயிருடன் இல்லை, ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் உயிருடன் உள்ளார். இந்தியாவின் பிரதமராக இருக்கும் அவர், பிரதராகும்வரை அவருக்கு அமெரிக்காவில் அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்

தூங்கிக் கொண்டிருக்கநேருவின் இந்தியாஅல்ல!இது மோடியின் புதிய இந்தியா!:ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

பிலாவல் பூட்டோவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் “ பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கள் அநாகரீகத்தின் உச்சம். வங்கத்து மக்கள், இந்துக்கள் மீது பாகிஸ்தான் அரசு கடந்த 1971ம் ஆண்டு நடத்திய வன்முறையை பிலாவல் பூட்டோ மறந்துவிட்டார். சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் இன்னும் மாறவில்லை, தீவிரவாதிகளுக்கு புகலிடம், நிதியளித்தலில் பாகிஸ்தான் இன்னும் தீவிரமாக இருக்கிறது என்பது உலகிற்கு தெரியும்” எனத் தெரிவித்தார்

சமையலறை தெலங்கானா, படுக்கையறை மகாராஷ்டிரா - விநோத வீட்டின் நிலை

இந்நிலையில் அனைத்து இந்திய சூஃபி சஜாதனாஷின் கவுன்சில் பிரதமர் மோடியை விமர்சித்த பிலாவல்பூட்டோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் நசிரூதீன் சிஸ்டி ஜெய்பூரில் அளித்த பேட்டியில் கூறுகையில் “ பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேசத்துக்கு எதிராகவும் நாகரீகமற்ற, விஷமத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.  

பிலாவல் பூட்டோ ஒன்றை மறந்துவிட்டார். தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சாகவில்லை, அவர் பாகிஸ்தானில் புகலிடமாக இருந்தபோது பாகிஸ்தான் அரசு உதவியுடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.

விஜய் திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் என்ன?

பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களைவிட, இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிகுந்த பாதுகாப்புடனும், சிறப்பான நிலையிலும் வாழ்கிறார்கள். நிலையற்ற தங்கள் நாட்டுடன் இந்தியாவை பூட்டோ ஒப்பிடக்கூடாது. இந்திய அரசியலமைப்பு அமைப்புகள்  அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்துள்ளன.” எனத் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!