ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து, கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஆதிக்கம் செலுத்த கத்தார் அரசு முயற்சிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து, கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஆதிக்கம் செலுத்த கத்தார் அரசு முயற்சிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தார் அரசிடம் இருந்து லஞ்சம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் 4 பேரை பெல்ஜியன் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கத்தார் அரசு தலையீடு உள்ளது என்று இதுவரை ஐரோப்பிய நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
undefined
உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை! 70 ஏவுகணைகளை வீசி மிகப்பெரிய தாக்குதல்
ஐரோப்பிய யூனியனின் 14 துணைத் தலைவர்களில் ஒருவரான கிரேக்க நாட்டு எம்.பி. இவா கெய்லி(வயது44) கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை அடுத்தவாரம் வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்த வாக்கெடுப்பில், 625 க்கு 1 என்ற கணக்கில் வாக்கெடுப்பில் கெய்லி வென்றார், தனக்கும் இந்த ஊழலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் கூறுகையில் “ ஐரோப்பிய நாடாளுமன்ற விவகாரங்களில் 3வது நாடு, 3வது நபர்தலையீடு இருக்கிறது. அரசியல் மற்றும் ராஜாங்கரீதியான முடிவுகளை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த, அதிகபட்சமான பணத்தை லஞ்சமாக வழங்கியுள்ளனர், ஏராளமான பரிசுகளையும் வழங்கி, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க நிர்பந்தித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை பெல்ஜியம் போலீஸார் 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 16 லட்சம் யூரோக்கள், கணினிகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவரை 6 பேரை பெல்ஜியம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் என்று தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எம்.பி. கெய்லிஉள்ளிட்ட 6 பேர் அடங்குவர். கெய்லியின் கணவர் பிராசிஸ்கோ ஜியோர்ஜி இத்தாலிய எம்.பி ஆன்ட்ரியா கோஜோலினோவுக்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கிரேக்க எம்.பி. கெய்லியை கிரேக்க கட்சியான பசோக் மூவ்மெண்ட் பார் சேஞ்ச் கட்சியும், ஐரோப்பிய யூனியனின் சோசலிஸ்ட் மற்றும் ஜனநாயகக் குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
எல்லை மோதல்: இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை
ஐரோப்பிய யூனியனின் மூத்த அதிகாரி உர்சுலா வான் டெர் லேயான் கூறுகையில் “ ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 3வது நபர் தலையீடு என்பதும், தாக்கம் செலுத்துவதும் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. எங்கள் அமைப்புகள் மீதான இந்த நம்பிக்கை மற்றும் பரஸ்பரத்தின் மீது உயர்ந்த சுதந்திரம் மற்றும் நேர்மையும் தேவை”எ னத் தெரிவித்துள்ளார்.
கத்தார் ஏன் தலையிடுகிறது
கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கத்தார் நாட்டில் வேலைக்கு வந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை மிகவும் மோசமாக கத்தார் நடத்துகிறது, மனிதநேயத்துடன் நடத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்எழுந்து விவாதிக்கப்பட்டால் கத்தார் நாட்டின் நம்பகத்தன்மை போய்விடும், தொழிலாளர்களின் நலனுக்காக திட்டங்களை செய்துள்ளார்கள் என்ற பேச்சு பொய்யாகிவிடும். அதில் பின்னடைவு ஏற்படும். இதனால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்த விவாதத்தை எழுப்பவிடாமல் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து காலதாமதம் செய்ய கத்தார் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது