உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு 70 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு 70 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
இதையடுத்து, தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மீண்டும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணைத் தாக்குதலில் மத்திய கிரிவ் ரிவ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு சேதமடைந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். கெர்சன் நகரின் தெற்கில் ஒருவர் கொல்லப்பட்டார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மக்களிடம் தொலைக்காட்சியில் பேசுகையில் “ ரஷ்யாவிடம் இன்னும் போதுமான ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளன, அதனால் மிகப்பெரிய தாக்குதல் நடத்த முடிகிறது. ஆதலால், மேற்கத்திய நாடுகள், எங்களுக்கு தேவையான ஆயுதங்களையும் , சிறந்த ராணுவத் தளவாடங்களையும் வழங்க வேண்டும். உக்ரைன் வலிமையாக ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும், மீண்டு எழும். மாஸ்கோவிலிருந்து வரும் ராக்கெட்டை நம்பினாலும், இந்த போரில் அதிகார சமநிலையை மாற்றாது” எனத் தெரிவி்த்தார்
ல்லை மோதல்: இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை
கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள்வரை தீவிரமான போர் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ரஷ்யா நடத்திய போருக்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகள், அமெரி்க்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், பொருளாதாரத்த டை விதித்தன. இதனால் தனித்துவிடப்பட்ட நிலையில் இருந்த ரஷ்யா சர்வதேச அரங்கில் ஒதுங்கியே இருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில்கூட உக்ரைன் ரஷ்யா போருக்கு முடிவு ஏற்பட வேண்டும் என உலகத் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா நடத்தும் இந்த போரை போர் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா எங்களை அழிக்க விரும்புகிறது, அடிமைகளாக மாற்ற முயல்கிறது. ஆனால், நாங்கள் சரண் அடையமாட்டோம். நாங்கள் அனைத்தையும் தாங்குவோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் கிவ் நகரில் திடீரென மின்பற்றாக்குறை ஏற்பட்டது. மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. உக்ரைனின் 2வது பெரிய நகரான கார்விக் நகரம் ஏவுகணைத் தாக்குதலில் மோசமாகப் பாதிக்கப்பட்டது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
உக்ரைனின் 5-ல் ஒருபகுதியை ரஷ்யா பிடித்துள்ளது. அதாவது தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியை ரஷ்யா பிடித்துள்ளது. ரஷ்யா நேற்று நடத்திய இந்தத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அதேநேரம், ரஷ்யாவின் 37 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.