இலங்கை அதிபர் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

By Ramya s  |  First Published Jul 26, 2024, 9:44 AM IST

இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். எனினும் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன இதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த் ராஜபக்ச இருவரும் பதவி விலகினர்.

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் அதே ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடாளுமன்ற எம்.பிக்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ரணில் விக்ரம சிங்க புதிய அதிபராகவும், குணவர்த்தன பிரதமராகவும் பதவியேற்றனர்.

ட்ரம்பும் இல்ல, கமலா ஹாரிஸும் இல்ல.. அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர் தான்.. பிரபல தீர்க்கதரிசி கணிப்பு..

இலங்கையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த சூழலில் இலங்கை அதிபர் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டார்க் ஆக்ஸிஜன் என்றால் என்ன? ஆழ்கடலில் 13,000 அடி ஆழத்தில் என்ன நடக்குது? விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சர்த் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த 76 ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சி செய்த ஊழல் கட்சிகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. ஊழலை வேரறுக்க வேண்டும். இதற்காகவே நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்: என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!