டார்க் ஆக்ஸிஜன் என்றால் என்ன? ஆழ்கடலில் 13,000 அடி ஆழத்தில் என்ன நடக்குது? விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

By SG Balan  |  First Published Jul 25, 2024, 10:20 PM IST

இந்தக் கண்டுபிடிப்பு ஆக்ஸிஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, பூமியில் மனித வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேற்பரப்பிலிருந்து 4,000 மீட்டர் கீழே, சூரிய ஒளி கூட ஒருபோதும் எட்டாத இடத்தில், ஆக்ஸிஜன் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"இருண்ட ஆக்ஸிஜன்" (டார்க் ஆக்ஸிஜன்) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, உயிரினங்கள் இல்லாத இடத்தில் காணப்படுவது இதுவே முதல் முறை என்று கூறுகின்றனர். பொதுவாக, தாவரங்கள் மற்றும் பாசிகள் போன்ற ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன.

Tap to resize

Latest Videos

undefined

நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற அறிவியல் ஆய்வு இதழில் ஆய்வுக்குக் கட்டுரை வெளியாகியுள்ளது. "ஆக்ஸிஜன் முழுக்க முழுக்க இருளாக இருக்கும் இடத்திலும் உருவாகலாம் என்று இப்போது தெரிகிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஆக்ஸிஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, பூமியில் மனித வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது" என அந்தக் கட்டுரை கூறுகிறது.

ஒரு மணிநேரத்துல சென்னை டூ பெங்களூரு போகலாம்! விரைவில் வரும் அதிவேக ரயில் திட்டம்!

"தாவரங்கள் தோன்றவதற்கு முன்பே பூமியில் ஆக்ஸிஜன் இருந்திருக்க வேண்டும். பூமிக்கு ஆக்ஸிஜனை வழங்குவது ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள்தான் என்பது நம் புரிதல். ஆனால் ஒளி இல்லாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை இப்போதுதான் அறிந்திருக்கிறோம். அப்படியானால், உயிரினங்கள் எங்கிருந்து தொடங்கின என்பது போன்ற கேள்விகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறுகிறார்.

ஆழ்கடல் சுரங்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தின் கடற்பரப்பின் மாதிரியை எடுக்கும்போது இந்த டார்க் ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது ஆழ்கடலில் கிடைக்கும் கனிமங்களைப் பிரித்தெடுத்தல் தொடர்பான ஆராய்ச்சியுடன், டார்க் ஆக்சிஜன் உற்பத்தியைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

தங்கம் விலை தொடர்ந்து குறையுது! தங்கத்தில் முதலீடு என்ன வழிகள் இருக்குன்னு தெரியுமா?

click me!