நம் சூரிய குடும்பத்தின் முதல் மற்றும் வெப்ப கிரகமான புதன் கோள் முழுவதும் வைர வைடூரியங்களால் நிரம்பியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 மைல் திக் அடுக்காக வைரங்கள் கிரகத்தை சூழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பால்வெளி அண்டத்தில் பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் நம்மைப்போன்ற ஜீவராசிகள் வாழ்வதற்கான, வாழ்ந்ததற்கானவோ ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், இந்த பால்வெளி அண்டத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் அமெரிக்காவின் நாசா மற்றும் மற்ற நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் தினம் தினம் கிடைத்து வருகிறது.
பூமியில் இயற்கையாக கிடைக்கும் தாதுப்பொருட்கள் மற்றும் கனிமவளங்கள் தீர்ந்து போகும் பட்சத்தில், புவிக்கு அருகேயுள்ள விண்கற்கள் மற்றும் பிற கிரகங்களில் உள்ள தாது மற்றும் கனிம வளங்களை ஆய்வு செய்தும், அவற்றை பூவிக்கு கொண்டு வரும் முயற்சியிலும் பலகட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Powerful Passport | இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா போது! 195 நாடுகளுக்கு விசா இல்லாம போகலாம்!
undefined
புதன் கோள் ஆய்வு!
அண்மையில், சூரியனுக்கு மிக அருகே உள்ள கிரகமான புதனில் சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளை சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், புதன் கிரகத்தில் ஏராளமான வைரம் வைடூரியம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
புதன் கோளின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா, இரும்பு ஆகிய உலோகங்களின் கலவை உள்ளதாகவும், அவற்றிற்கு கீழ் சுமார் 10 மைல் அதாவது 14 கிலோ மீட்டர் தடிமனுக்கு வைரம் சூழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் நேச்சர் கம்யூனிகேசன்ஸ் என்ற அறிவியல் இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள், புதன் கோளில் உள்ள வைரத்தை வெட்டி எடுக்க வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Nepal Plane Crash: நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! உடல்கள் மீட்கும் பணி தீவிரம்!
430 டிகிரி வெப்பநிலை!
நெருப்பு கோளான சூரியனுக்கு மிக மிக அருகில் உள்ள புதன் கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ் கொண்டது. இந்த வெப்பநிலையை தாக்குபிடித்தும், கடந்தும் நம் புவியிலிருந்து தயாரிக்கப்படும் விண்கலன்கள் புதனை சென்றடைவது மிக மிக கடினம்.
Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?