Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 25, 2024, 12:05 AM IST

கமலா ஹாரிஸ் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கும் அரசியல்வாதிகளில் ஒருவராக மாறிவிட்டார். அவரது மொத்த சொத்து மதிப்பு 8 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.


தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்த ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் கமலா ஹாரிஸ் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கும் அரசியல்வாதிகளில் ஒருவராக மாறிவிட்டார். இந்திய வம்சாவளிச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

undefined

கணவரின் பங்களா:

இப்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் 218,000 டாலர் சம்பளமாகப் பெறுகிறார். அவரது கணவர் டக் எம்ஹாஃப்  20212ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு மில்லியன் டாலருக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அதன் தற்போதைய மதிப்பு சுமார் 4.4 மில்லியன் டாலர். கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்பதற்கு முன் அவர் எழுதிய புத்தகங்களுக்காக பதிப்பகங்களிடம் இருந்து 500,000 டாலர் முன்பணமாகப் பெற்றுள்ளார்.

Income Tax Slab: வருமான வரியில் ரூ.18,200 சேமிப்பது எப்படி? மத்திய பட்ஜெட்டில் டாப் ஹைலைட்டே இதுதான்!

வழக்கறிஞர் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் சட்டப்படிப்பை முடித்தவர். 1989 இல் அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2004இல் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞரானார். அப்போதே அவரது ஆண்டு சம்பளம் 140,000 டாலர். இது 2010 இல் 200,000 டாலராக உயர்ந்தது. கமலா 2010 இல் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 இல் செனட்டர் ஆனார். அப்போது ஆண்டுக்கு 174,000 டாலர் சம்பாதித்தார்.

கமலா ஹாரிஸ் வங்கிக் கணக்கு:

கமலா ஹாரிஸ் தனது சேமிப்புக் கணக்கில் 250,000 முதல் 500,000 டாலர் பணம் வைத்திருப்பதாக ஃபோர்ப்ஸ் (Forbes) தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேபோன்ற தொகை அவரது ஓய்வூதியக் கணக்குகளிலும் உள்ளது. பொதுச் சேவையில் அவர் பணியாற்றியதன் மூலம் அவர் பெற்ற ஓய்வூதியம் சுமார் 1 மில்லியன் டாலர்.

கமலா ஹாரிஸ் சொத்து மதிப்பு:

2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரி தேர்தலின்போது ஹாரிஸின் நிகர மதிப்பு 6 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது. அவரது கணவர் டக் எம்ஹாஃப் வழக்கறிஞராகப் பணிபுரிந்து ஆண்டுக்கு ஒரு மில்லியன் சம்பாதிக்கிறார் என்றும் தெரிந்தது. இரண்டும் சேர்த்து மொத்த மதிப்பு சுமார் 8 மில்லியன் டாலர்கள்.

வெறும் 2000 க்குள் சூப்பரான ஆடியோ அனுபவம்! மியூசிக், கேமிங் ரசிகர்களுக்கு டாப் 5 ஹெட்போன்கள்!!

click me!