மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த மணப்பெண்! 

By Kalai Selvi  |  First Published Jul 24, 2024, 5:14 PM IST

Shortest Marriage Ever in Tamil : திருமண உறவில் மரியாதை, அன்பு, அனுசரிப்பு, பொறுமை ஆகியவை மிகவும் அவசியம். பல தசாப்தங்களாக பாலும் தேனும் போல வாழ்ந்தாலும் இவை இல்லை என்றால் விவாகரத்து உறுதி.


திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம். ஆனால், திருமணம் சிலருக்கு சந்தோஷமாகவும், சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது. ஏன் பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட, இருவருக்கும் ஒத்து வரவில்லை என்றால், விவாகரத்து செய்து கொள்கிறார்கள். 

விவாகரத்து என்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய விஷயம் அல்ல. சில திருமணங்கள் ஓரிரு வருடங்களில் முடிகின்றது. இன்னும் சில திருமணங்களோ 10 அல்லது 30 ஆண்டுகள் கடந்து பிறகும் விவாகரத்தில் தான் முடிகிறது. காரணம், கணவன் மனைவி இடையே நம்பிக்கை இல்லாமை, இருவருக்கும் இடையே அமைதியற்ற உறவு போன்றவை விவாகரத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், துபாயில் 
ஒரு தம்பதி திருமணமாகி மூன்றே நிமிடங்களில் விவாகரத்து செய்து பிரிந்தனர். அநேகமாக இதுதான் முதல் முறையாக மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்ற திருமணமாகும். இந்த ஜோடி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக ஆச்சரியம் அடைவீர்கள். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:   Sleep Divorce பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதனால் கணவன் மனைவிக்குள் நடப்பது என்ன?

அந்த குவைத் தம்பதியினர் தங்களது உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது, திருமணம் முடிந்து மணமகள் படிக்கட்டில் இருந்து கீழ இறங்கிய போது கால் இடறி விழுந்தார். கீழே விழுந்த மணமகளுக்கு கை கொடுக்காமல், மணமகன் மணமகளை பார்த்து கோபத்தில் 'முட்டாள், பார்த்து நடக்க மாட்டியா' என்ற வார்த்தையை சொல்லி திட்டியுள்ளார். 

இந்த வார்த்தையை கேட்ட அதிர்ச்சி அடைந்த மணமகள் தனது கணவர்,  தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாமலும், எதிர்காலத்தில் இவர் என்னவெல்லாம் செய்வாரோ என்ற பயத்திலும், உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்த அவர் நீதிபதியிடம் தனக்கு உடனே விவாகரத்து தருமாறு கேட்டார்.  மணமகளின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் திருமணத்தை ரத்து செய்தனர். திருமணம் முடிந்த வெறும் மூன்று நிமிடங்களில் விவாகரத்து வழங்கப்பட்டதால்,  வரலாற்றில் குவைத்தின் இந்த திருமணம் தான் மிகக் குறுகிய கால திருமணம் என பேசப்படும்.

இதையும் படிங்க:  தினமும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்த கணவர்... மதுவுக்கு அடிமையான ஊர்வசி - விவாகரத்து பற்றி மனம்திறந்த நடிகை

இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மணப்பெண்ணின் துணிச்சலான  நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருமணத்தில்,பரஸ்பரம் மரியாதையும், அன்பும் இருக்க வேண்டும். ஆனால் இவர்களது திருமணத்தில் ஆரம்பத்தில் மரியாதை இல்லை. எனவே, மணமகள் திருமணத்தை முடித்துக் கொண்டது நல்லது என்று தெரிவித்துள்ளனர். கல்யாணமான சில நிமிடங்களிலே, அவன் இப்படி நடந்து கொள்வது கொண்டான். அவள் அவனை விட்டு பிரிந்தது நல்ல விஷயம் என்று ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதே போல் 2004 ஆம் ஆண்டில் பிரிட்டனில் ஒரு ஜோடி திருமணமான 90 நிமிடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தனர். அந்த நேரத்தில், இந்த திருமணம் பெரிய செய்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!