
நேபாளத்தில் இருந்து 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானம் சறுக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் விமானம் பற்றி எரிந்தது. பொக்காராவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக TIA செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா விமானம் விபத்துக்குள்ளானது. சம்பவ இடம் புகை மண்டலம் போன்று காட்சியளித்தது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கிடைத்த இருக்கும் முதல் கட்ட தகவலின்படி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தையடுத்து, தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.