1955ம் ஆண்டு முதல் இன்று வரை நேபாள விமான வெளியில் நிகழ்ந்த 70 விமான விபத்துகளில் சுமார் 900 பேர் பலியாகியுள்ளனர். அவற்றில் 44 விமான விபத்துகள் மிகவும் ஆபத்தானவை.
உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து மிக பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், நேபாளத்தில் அவ்வளவாக இல்லை. நிச்சயமற்ற காலநிலை, குறைவான ஓடுதளம் போன்ற காரணங்களால் நேபாள வான வெளி மற்றும் விமான நிலையங்கள் அதிக ஆபத்தை கொண்டுள்ளன.
நேபாளத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா விமானம் விபத்துக்குள்ளானது. சம்பவ இடம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது போன்று காட்சியளித்தது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கிடைத்த இருக்கும் முதல் கட்ட தகவலின்படி 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தையடுத்து, தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி அளித்த தகவலின் படி (CAAN) 1955 முதல் நேப்பாளத்தில் சுமார் 70 விமான விபத்துகளை பதிவு செய்துள்ளது - அவற்றில் 44 விபத்துகள் மிகவும் ஆபத்தானவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொடரும் விபத்துகளால், இமயமலை தேசத்தில் விமானப் பயண பாதுகாப்பு பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது, உலகின் மிக உயரமாக எவரெஸ்ட் சிகரம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள் மற்றும் சறுக்கு வீரர்களிடையே மிகவும் பிரபலமானவை.
Nepal Plane Crash: நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! உடல்கள் மீட்கும் பணி தீவிரம்!
நேபாளத்தின் வானிலை & நிலப்பரப்பு
இயற்கை எழில் கொஞ்சும் நேபாளம், குறிப்பாக மழைக்காலங்களில், சாத்தியமில்லாத நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலையை கொண்டுள்ளது. அதனால்தான் நேபாளத்தின் விமானப் போக்குவரத்து பெரும்பாலும் ட்வின் ஓட்டர்ஸ், லெட்-எல் 410கள் மற்றும் டோர்னியர்ஸ் போன்ற வரையறுக்கப்பட்ட வகை விமானங்களையே சார்ந்துள்ளது.
பெரிய விமானங்கள் பறக்க ஏதுவான டிரங்க் செக்டார் போன்ற அமைப்பு இல்லாததால், பெரிய வகை விமானல்கள் குறுகிய டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (STOL) விமானநிலையங்கள் மூலம் இயக்கப்படுகிறது. இதுவே பெரும்பாலான நேரங்களில் விபத்திற்கும் வழிவகுக்கிறது.
விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் இடையே உள்ள உயரமான நிலப்பரப்புகளில் ஏற்படும் எதிர்பாராத வானிலை மாற்றங்கள்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம். இந்த வழித்தடங்களில், பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் காட்சி விமான விதிகளை (விஎஃப்ஆர்) பயன்படுத்துகின்றன. அதாவது, விமான பைலட் வெளியில் இருந்து காட்சி குறிப்புகளைப் பயன்படுத்தி விமானத்தை கட்டுப்படுத்தி வழிநடத்துவார்.
மேலும், விஎஃப்ஆர் விதிகளை துல்லியமாக பின்பற்றுவது வானிலையில் சாத்தியமில்லை என விமான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, மேகங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று விதிகள் கூறுகின்றன, ஆனால் சில நேரங்களில் அவற்றைத் தவிர்க்க முடியாது. எனவே விமானிகள் விதிகளை மீறும் அபாயத்தை எடுத்துக்கொள்கிறார்கள், இவையும் எதிர்பாராத சூழ்நிலைகளில் விமான விபத்திற்கு வழிவகுக்கின்றன.