இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை பிரதமர் மாளிகையான அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.
மேலும் செய்திகளுக்கு.. Sri lanka : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா..தொடரும் போராட்டம் !
இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இரு மாதங்களுக்கு முன் பதவியேற்றார். அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால், ஆத்திரமும், ஏமாற்றமும் அடைந்த இலங்கை மக்கள், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அரசு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், போராட்டக்காரர்கள் வந்து கொண்டே உள்ளனர்.போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. கொளுந்து விட்டு எரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு.. போராட்டக்காரர்கள் தீ வைப்பு -வைரல் வீடியோ !
கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவரின் சொத்து மதிப்பு தோராயமாக 10 மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் 79 கோடி ஆகும்.
மேலும் செய்திகளுக்கு.. Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !