இலங்கையின் யாழ்பாணம் நகரிலிருந்து சென்னைக்கு 3 ஆண்டுகளுக்குப்பின் அடுத்தவாரம் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது என்று இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் யாழ்பாணம் நகரிலிருந்து சென்னைக்கு 3 ஆண்டுகளுக்குப்பின் அடுத்தவாரம் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது என்று இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால், சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும், பொருளாதாரம் வளரும் என்று அரசு நம்புகிறது. இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை முக்கியமானதாகும்.
துப்பாக்கி,வெடிகுண்டு சாட்டிலைட் என குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்!மக்களுக்கு வடகொரியா எச்சரிக்கை
இலங்கைப் பொருளதாரத்தின் வளர்ச்சி பெரும்பகுதி சுற்றுலாத்துறையை நம்பித்தான் இருக்கிறது,அந்நியச் செலாவணியும் சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது. ஆனால், கொரோனா காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.
இலங்கைக்கு கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், நவம்பரில் இலங்கைக்கு சுற்றுலா மூலம்10.75 கோடி டாலர்கள் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 11 மாதங்களில் 112.94 கோடி டாலர் அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியின் ‘சிறந்த வார்த்தை’ எது ? ஆன்லைன் வாக்கெடுப்பில் தேர்வு
இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அடுத்த நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமலா ஸ்ரீபலா நாடாளுமன்றத்தில் கூறுகையில் “ வரும் 12ம்தேதி முதல் யாழ்பாணத்தின் பலாலி நகரில் இருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து தொடங்கும், ஓடுபாதையில் சில பணிகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ஓடுதளம், 75 இருக்கை விமானம் வந்து செல்லவே சரியானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
கடந்த 2019ம் ஆண்டு யாழ்பாணம் சர்வதேச விமானநிலையமாக மாற்றப்பட்டது. சென்னையில் இருந்துதான் முதல்முதலாக சர்வதேச விமானம் தரையிறங்கியது. யாழ்பாணம் விமானநிலையத்தை மேம்படுத்த இந்திய அரசு பெரும்பகுதி நிதியுதவி அளித்திருந்தது
வங்கக் கடலுக்குள் திடீர் நிலநடுக்கம்: வங்கதேசத்தின் பெரும்பகுதி குலுங்கியது
டாடாவின் ஏர் இந்தியாவுக்கு முன் ஏர் இந்தியா-சென்னை விமானம் வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் யாழ்பாணம்-சென்னை விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது