தேசப்பற்றுள்ள பெயர்களை மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும், இல்லாவிட்டால் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரிய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசப்பற்றுள்ள பெயர்களை மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும், இல்லாவிட்டால் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரிய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தி மிரர் நாளேடு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
2022ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியின் ‘சிறந்த வார்த்தை’ எது ? ஆன்லைன் வாக்கெடுப்பில் தேர்வு
வடகொரியாவில் உள்ள மக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தேசப்பற்றுள்ள பெயர்களைச் சூட்ட வேண்டும். பாக்2(பாம்), சுங்சிம்(விஸ்வாசம்), உய் சாங்(செயற்கைக்கோள்) என பெயர் சூட்ட வேண்டும். குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களால் அவர்களுக்குத் தேசப்பற்று வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தென் கொரிய மக்கள் வைக்கும் பெயர்களா ஆ ரி(அன்பு), சூ மி(பேரழகு) போன்ற பெயர்களை வடகொரிய மக்கள் சூட்டக்கூடாது. அதற்குப்பதிலாக நாட்டில் தற்போது நிலவும் சிக்கல்கள், பிரச்சினைகளை பெயர்களாக குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்எ னத் தெரிவித்துள்ளது.
எந்தக் குழந்தைக்கு தேசப்பற்றுள்ள பெயர் சூட்டப்படுகிறதோ அந்தக் குழந்தை தேசத்தின் மீது அதிகபற்றுள்ளதாக வளரும், சித்தாந்தங்கள் கொண்டதாக வளரும் என்று அரசு தெரிவி்த்துள்ளது.
தேசப்பற்றுள்ள பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டாத பெற்றோர் சமூகத்துக்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள் என்று அதிபர் கிம் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா' ! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது
வட கொரிய மக்கள் கூறுகையில் “ தங்கள் குழந்தைகளுக்கு வைத்த பெயர்களை மாற்றுங்கள் என அதிகாரிகள் மக்களை வற்புறுத்தியும் வருகிறார்கள். கடந்த மாதத்திலிருந்து தேசப்பற்றுள்ள பெயர்களை வைக்காதவர்களுக்கு அதிகாரிகள்நோட்டீஸ் அனுப்பி, பெயர்களை திருத்தம் செய்யக் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தங்கள் பெயர் முடியும்போது, தேசப்பற்றுள்ள பெயர்களை இணைக்க இந்த ஆண்டுவரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தேசப்பற்றுள்ள வார்த்தையைச் சேர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தென் கொரிய மக்களுக்கு இருக்கும் பெயர்களைப் போல் வட கொரிய மக்களுக்கு பெயர் இருக்கக்கூடாது. இந்ததலைமுறையின் சிக்கல்களை வெளிப்படுத்தும் வகையில், இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தி மிரர் நாளேட்டு தெரிவித்துள்ளது