ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், பெண் ஒருவர் தனது சமையலறையில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் இனச்சேர்க்கை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், பெண் ஒருவர் தனது சமையலறையில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் இனச்சேர்க்கை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்மைக்காலமாக பாம்புகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதையும் படிங்க: கைகளில் நடுக்கம்.. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்.. கவலைக்கிடமா.? அதிர்ச்சி தகவல் !
குயின்ஸ்லாந்தில் உள்ள புடெரிமில் ஒரு பெண் தனது சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது மைக்ரோவேவ் அசைவதைக் கண்டுள்ளார். அதன் அருகே சென்று பார்த்தபோது, ராட்சத பாம்பின் வால் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் மைக்ரோவேவ் அடுப்புக்குப் பின்னால் இனச்சேர்க்கை செய்வதைக் கண்டுள்ளார்.
இதையும் படிங்க: பாம்பின் வாலை இழுத்த இளைஞரை ‘அந்த’ இடத்தில் கடித்த துணிவான பாம்பு - வைரல் வீடியோ !
இதை அடுத்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர். இந்த வீடியோவை அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.