ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் தன்னுடைய மாஸ்கோ இல்லத்தில் தவறி விழுந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார் ரஷ்ய அதிபர் புடின்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியது என்றும் கூறியுள்ளது. 70 வயதான ரஷ்ய அதிபர் புட்டினுக்கு புற்றுநோய் இருக்கிறது என்றும், அது அவரது வயிறு மற்றும் குடலைப் பாதித்ததால் இது ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அவரது கியூபா பிரதிநிதி மிகுவல் டயஸ்-கேனலுடனான சந்திப்பின் போது, புடினின் கைகள் நடுங்கி ஊதா நிறமாக மாறியதாக இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. Modi Mother Age:குஜராத் தேர்தல்: 100-வது வயதிலும் சக்கரநாற்காலியில் வந்து வாக்களித்த, பிரதமர் மோடியின் தாயார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரிட்டிஷ் உளவாளி ஒருவர், 70 வயதான அதிபர் புடின், இரத்த புற்றுநோயால் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்றும் அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வெளிவருவது இது முதல் முறை அல்ல.
ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டில், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளர், புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து செய்தியை வெளியிட்டு வருகிறது. அதில் உண்மை ஏதுமில்லை என்றும் மறுத்து பேசியிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. தளபதி 67 படத்துக்காக முதன்முறையாக ரஜினியின் சென்டிமென்டை பாலோ பண்ணிய விஜய்
இதையும் படிங்க.. அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது.? கட்சியை வழிநடத்த யாருக்கும் தகுதி இல்லை.! ஜெ. நினைவு நாளில் தீபா ஆவேசம்