ஒருவர் பாம்பை குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் பாம்பை குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பாம்புகள் குறித்த வீடியோ அதிக அளவில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாம்பை குளிப்பாட்டும் வீடியோ வைரலாகி உள்ளது. ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஆண் ஒருவர் குளியலறையில் நிற்கிறார்.
இதையும் படிங்க: நீருக்கடியில் அதிக நேரம் முத்தமிட்ட ஜோடி… வீடியோவை பகிர்ந்த கின்னஸ் ரெக்கார்ட்ஸ்!!
கீழே நாக பாம்பு படமெடுத்தபடி உள்ளது. அதன் அருகே இருந்த வாளியில் உள்ள தண்ணீரை எடுத்து, அதன் தலை மேல் அந்த நபர் ஊற்றுகிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில், பல அடி நீளமுள்ள அந்த பாம்பு நீர் ஊற்ற தன்னை நோக்கி வரும் பிளாஸ்டிக் கோப்பையை கவ்வி கொள்கிறது. சற்று விலகினாலும், அந்த நபரின் கையை பதம் பார்த்திருக்கும். ஒரு வேளை செல்ல கடியாக இருக்க கூடும்.
இதையும் படிங்க: என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா' ! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது
எனினும், அதற்கு விஷம் எடுக்கப்பட்டு இருப்பது பற்றிய விவரம் தெரிய வரவில்லை. ஆனால், அதனை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து, தலை முதல் தண்ணீரை ஊற்றி, தொட்டு அந்த நபர் குளிப்பாட்டி விடுகிறார். அந்த பாம்பும் பொறுமையாக குளிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
इतने ठंड में बेचारे सांप को पानी से नहला रहा है 🥲🐍🙏 pic.twitter.com/DtkrL4xiW3
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab)