இத்தாலியை சேர்ந்த ஒரு தம்பதி நீருக்கடியில் அதிக நேரம் முத்தமிட்டு சாதனை படைத்துள்ளனர்.
இத்தாலியை சேர்ந்த ஒரு தம்பதி நீருக்கடியில் அதிக நேரம் முத்தமிட்டு சாதனை படைத்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த மிச்செல் பியூசரினோ மற்றும் எலிசா ஜோடி நீருக்கடியில் அதிக நேரம் முத்திமிட்டு சாதனை படைத்தது. இதுக்குறித்த கின்னஸ் ரெக்கார்ட்ஸ் பகிர்ந்துள்ள வீடியோவில், இந்த சாதனைக்காக வடிவமைக்கப்பட்ட தொட்டியில் இறங்கிய அந்த ஜோடி, நீண்ட நேரம் முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.5 கோடிக்கு மேல் சொத்து… மாதம் ரூ.1.27 லட்சம் சம்பாதிக்கும் தெருவில் வசிப்பவர்!!
கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னஸ் ரெக்காட்ர்ஸின் பதிவில், நீருக்கு அடியே இவர்கள் தந்த முத்தம் 3 நிமிடம் 24 வினாடிகள் நீடித்தது. இந்த சாதனை 2010ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி படைக்கப்பட்டது. இதை இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் ஃபுகாரினோ மற்றும் எலிசா லஸ்ஸரினி படைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லத் தேவையில்லை: ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பேச்சு
இதனிடையே 2013 ஆம் ஆண்டு தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய் திரனாரத் மற்றும் அவரது மனைவி லக்சனா 58 மணி நேரம், 35 நிமிடங்கள் மற்றும் 58 வினாடிகள் விடாமல் முத்தம் கொடுத்து சாதனை படைத்தனர். இதற்கு முன்பு 50 மணி நேரம் முத்தம் கொடுத்தே சாதனையாக இருந்த நிலையில், அதை இந்த ஜோடி முறியடித்துள்ளது.